search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோடி மீது பாய்ச்சல்"

    மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் கசாப்பு கடைக்காரர்கள் போல் செயல்படுகின்றனர். ஆனால் அவர்கள் விலங்குகளை கொல்வதற்கு பதிலாக மனிதர்களை கொன்று வருகின்றனர் என சிவசேனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. #Sivasena #BJP #Modi
    மும்பை:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.  இந்த விவாதத்தில் பங்கேற்காமல் சிவசேனா கட்சி புறக்கணித்துள்ளது.

    இந்நிலையில், மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் கசாப்பு கடைக்காரர்கள் போல் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் அவர்கள் விலங்குகளை கொல்வதற்கு பதிலாக மனிதர்களை கொன்று வருகின்றனர் என சிவசேனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

    இதுதொடர்பாக, சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் வெளியான கட்டுரையில், “நாட்டில் ஆட்சி செய்பவர்கள் கசாப்பு கடைக்காரர்கள் போல் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் விலங்குகளை கொல்வதில்லை. அதற்கு மாறாக, மனிதர்களை கொன்று வருகின்றனர்.

    எப்படியாவது தேர்தலில் வெற்றி பெறுவதும், ஆட்சியில் நீடிப்பதும் ஜனநாயகம் அல்ல. பெரும்பான்மை என்பது எப்போதும் நிரந்தரமல்ல. நாட்டு மக்களே முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.

    இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் மோடி அரசை பதவியில் இருந்து கீழே இறக்க முடியாது.  ஒரு வெற்றியில் சந்தேகம் இருந்தால் பெரும்பான்மை பற்றி பேசக்கூடாது. பணம், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்தல் ஆகியவற்றின் மூலம் வெற்றி அடைவது வெற்றியாகாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Sivasena #BJP #Modi
    ×